களுத்துறை சர்வதேச "விழித்தெழு பெண்ணே" அமைப்பின் மக்கள் சேவை - 2023
சர்வதேச பெண்கள் அமைப்பான ‘விழித்தெழு பெண்ணே’
அமைப்பின் சமூக பணிகள் களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள, ஹொரணை பகுதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விழித்தெழு பெண்ணே அமைப்பின் நிறுவுனர் திருமதி சசிகலா நரேந்திரனின் ஆலோசனைக்கு அமைவாக, முன்னெடுக்கப்படும் இந்த சமூகப் பணிகள் களுத்துறை மாவட்டத்தில் முதற் கட்டமாக ஹொரணை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஐம்பது மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டதுடன், ஹொரணை தமிழ் மகா வித்தியாலயத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள தொழில் பயிற்சி பாடத்திட்டத்திற்காக ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்பட்டது.
இந்த உதவித் தொகைiயை விழித்தெழு பெண்ணே அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி நரேந்திரா விவேகானந்தன், பாடசாலை அதிபர் நமசிவாயத்திடம் வழங்கினார்.
இதேவேளை விழித்தெழு பெண்ணே அமைப்பின் இரண்டாம் கட்ட பணியாக புளத்சிங்கள, கலஹேன, சாந்த பிரான்சிஸ் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி சிவராணியின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த விழித்தெழு பெண்ணே அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி நரேந்திரா விவேகானந்தன் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கி வைத்தார்.
ஹொரணை, புளத்சிங்கள பகுதிகளில் விழித்தெழு பெண்ணே அமைப்பினரால் நடத்தப்பட்ட மக்களுக்கான இந்த சமூகப் பணிகள் களுத்துறை மாவட்ட சமூக செயற்பாட்டாளர் திருமதி தனலட்சுமி மாதவன், ஊடகவியலாளர் மணி ஸ்ரீகாந்தன் ஆகியோரின் வேண்டுக்கோளுக்கு அமைவாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.